உங்களுடைய நிலையைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரிடம் பேசுங்கள்.

நீங்கள் எவ்வளவு பணம் செலவிடுகிறீர்கள் என்பதைக் கண்காணிப்பது கடினமாக உள்ளதா? அல்லது உங்களது ‘பில்’ கட்டணங்களில் சிலவற்றைச் செலுத்துவதில் அல்லது மளிகைப் பொருட்களை வாங்குவதில் சிரமப் படுகிறீர்களா? உங்கள் சூதாட்டப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாக ஆகிக்கொண்டிருக்கிறதா?

உங்களுடைய நிலையைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரிடம் பேசுங்கள். ‘பல்கலாச்சார சூதாட்டத் தீங்கு தடுப்பு சேவைகள்’ (Multicultural Gambling Harm Prevention Services)-இல், சூதாட்டத்தின் எதிர்மறையான விளைவுகளைக் கட்டுப்படுத்த எம்மால் உங்களுக்கு உதவ இயலும். மேலும் உங்கள் நிதிநிலை மற்றும் குடும்ப உறவுகள் விடயத்திலும் எம்மால் உதவ இயலும்.

உங்களுக்கு நெருக்கமான ஒருவரைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றாலும், எம்மால் உங்களுக்கு ஆதரவுதவியளிக்க முடியும்.

இலவச மற்றும் ரகசிய ஆலோசனை மற்றும் ஆதரவுதவிக்காக 1800 329 192 -இல் எங்கள் ‘ஹாட்லைன்’-ஐ அழைக்கவும் அல்லது gamblingharmprevention@ssi.org.au என்ற முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

Information in your language